மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்


மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2021 5:04 PM GMT (Updated: 2021-10-17T22:34:39+05:30)

பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் லயன்ஸ் கிளப் சார்பில் இன்று படிப்பறிவுத்திறன் தேர்வுக்கான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் குறைவாக இருப்பதால், மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சிரமப்படுவதாக தெரிவித்தார். எனவே இதை சரிசெய்யும் முயற்சியாக, பள்ளி நேரத்திற்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story