உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவகள் நாளை பதவி ஏற்பு

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவகள் அந்தந்த ஊராட்சிகளில் நாளை பதவி ஏற்க உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. இதில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் நாளை (20ம் தேதி) பதவியேற்கின்றனர். இதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலும், ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவி ஏற்கிறார்கள். அவர்களை தொடர்ந்து அந்தந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவி ஏற்க உள்ளனர்.
மேலும் வரும் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை பதவியேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 22 ஆம் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story