குதிரைகள் நடமாட்டம்
| ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் குதிரை ஒன்று குட்டியுடன் சுற்றித்திரிகிறது. இந்த குதிரை திடீரென குட்டியுடன் அங்குமிங்கும் ஓடி வருவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது விபத்து ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, விபத்தை தடுக்க குதிரைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். |
கழிப்பிட வசதி
| ஊட்டி ஓல்டு ஊட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிப்பிட வசதி உள்ளது. அந்த கழிப்பறை போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சுத்தம் செய்யாமல் இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. ஆகவே, கழிப்பிடத்தை முறையாக பராமரிப்பதோடு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். |
விபத்துகள் ஏற்படும் அபாயம்
| கூடலூரில் இருந்து ஊட்டி மற்றும் ஓவேலி பேரூராட்சிக்கு செல்லும் சாலைகள் இணையும் இடத்தில் கூடலூர் நகராட்சி அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஓவேலி செல்லும் சாலையோரம் வளைவான இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதால் விபத்துகள் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வளைவான இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும். |
விபத்தை ஏற்படுத்தும் சாலை
| கோவை சரவணம்பட்டி கீரணத்தம் சாலை சரவணா கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதியில் சாலைகள் சீரமைக்க பணிகள் மேற்கொள்ளப் பட்டது. தற்போது இந்த பணிகள் பாதியில் விடப்பட்டு உள்ளதால், சாலைகள் குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதியில் விடப்பட்ட பணிகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும். |
| பொன்.சுந்தரவடிவேலு, கீரணத்தம். |
தபால் அலுவலகம் வேண்டும்
| காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி உள்ளது. அதை சுற்றி எஸ்.ஆர். கே.நகர், கணேஷ்நகர், பொன்னம்மாள் நகர், சி.டி.சி.நகர், உள்பட பல ஊர்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஆசிரியர் காலனி தான் பொதுவான பகுதி. பஸ்களும் இங்குதான் நின்று செல்லும். ஆனால் இங்கு தபால் அலுவலகம் இல்லை எனவே ஆசிரியர் காலனியில் தபால் அலுவலகம் அமைக்க வேண்டும். |
| முருகேசன், ஆசிரியர் காலனி. |
குண்டும்-குழியுமான சாலை
| பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் வஞ்சியாபாளையம் பிரிவு முதல் நாட்டுக்கல் பிரிவு வரை சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும். |
| மாரிமுத்து, வஞ்சியாபாளையம். |
தேங்கிக்கிடக்கும் காய்கறி கழிவுகள்
| பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்கும் காய்கறி கழிவுகளை ஒரு வாரம் ஆகியும் இன்னும் அப்புறப் படுத்தவில்ல. தேங்கி கிடப்பதால் தூர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். |
வீணாக செல்லும் குடிநீர்
| கோவை மசக்காளிபாளையம் மெயின் ரோடு சிக்னல் அருகில் சாலை யில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் அங்கு தேங்கும் தண்ணீரால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர் கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. குடிநீர் வீணாகி வருவதையும், சாலையில் பள்ளம் ஏற்பட்டதையும் அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். |
| மூர்த்தி, மசக்காளிபாளையம். |
மது பிரியர்களின் செயலால் வேதனை
| பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிற்கும் இடத்தில் இரவு நேரத்தில் மதுபிரியர்கள் அமர்ந்து மது அருந்துகிறார் கள். பின்னர் அவர்கள் காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிட்டு செல்வதால், சரக்கு ரெயிலில் பொருட்களை ஏற்றுபவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அங்கு அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். |
தெருநாய்கள் தொல்லை
| கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை, பாரதி நகர், அருணாச்சல தேவர் காலனி உள்பட பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் வேலை முடிந்து செல்பவர்களை சூழ்ந்து கொண்டு துரத்தி துரத்தி கடிக்கிறது. அதுபோன்று நடந்து செல்லும் சிறுவர்களையும் துரத்துகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். |
சுரங்கபாதையில் தண்ணீர்
| பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையத்தில் இருந்து சிங்கா நல்லூர் செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கபாதை உள்ளது. இங்கு மழை நேரத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருப்பதால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் நீடித்து வருகிறது. எனவே அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். |
தூர்வார வேண்டும்
| கோவை மாநகராட்சி 21-வது வார்டு கோகுலம் காலனி, சாஸ்திரிநகர் முதல் வீதிக்கு அருகே உள்ள கணுவாய் பள்ளத்தில் சாக்கடை கால்வாய் சரிவர தூர்வாரப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். |