அக்.20: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...


அக்.20: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...
x
தினத்தந்தி 20 Oct 2021 1:21 AM GMT (Updated: 2021-10-20T06:51:36+05:30)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.  கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.103.01 ஆகவும் டீசல்  ரூ. 98.92-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.103.31 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ.99.26 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story