இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது - கமல்ஹாசன் டுவீட்


இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது - கமல்ஹாசன் டுவீட்
x
தினத்தந்தி 20 Oct 2021 6:39 AM GMT (Updated: 2021-10-20T12:09:50+05:30)

இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

“இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என்று தெரிவித்துள்ளார்.

Next Story