13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:48 AM GMT (Updated: 2021-10-21T13:49:04+05:30)

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களீல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழையானது அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளீல் இடி மின்னலுடன் கூடிய லேசன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி சங்கரன்கோவில் பகுதியில் 9 செ.மீ. மழையும், ராணிப்பேட்டை சோழிங்கர் பகுதியில் 8 செ.மீ. மழையும், திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை மற்றும் தேனி மஞ்சாறு பகுதியில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

மேலும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Next Story