ரேஷன்கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ரேஷன்கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 10:36 PM IST (Updated: 21 Oct 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
புதுச்சேரியில் கடந்த ஆட்சியின்போது ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால் ரேஷன்கடைகளில் பணிபுரிந்த 120 நிரந்தர ஊழியர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். 
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி ரேஷன் கடை ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ரேஷன்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர், குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இது பற்றிய தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. 
இதைத்தொடர்ந்து துறைஇயக்குனர் உதயகுமார், அங்கு வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மாத சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அவர்கள், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.
1 More update

Next Story