தொடர்ந்து உச்சம்: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104-ஐ நெருங்குகிறது


தொடர்ந்து உச்சம்: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104-ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 22 Oct 2021 11:59 PM GMT (Updated: 22 Oct 2021 11:59 PM GMT)

தொடர்ந்து உச்சம்: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104-ஐ நெருங்குகிறது, ரூ.100-ஐ தொடும் டீசல் விலை.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தில் ஒவ்வொரு நாளும் முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு விலை குறைந்து வந்த நிலையில், பெட்ரோல் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 16-ந்தேதி வரலாறு காணாத புதிய உயர்வை எட்டியது. அதேபோல், டீசலும் கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து கிடுகிடு வென உயரத் தொடங்கி, தினமும் உச்சத்தை தொட்டு கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனை ஆனது. டீசலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே தினமும் பெட்ரோல் 33 காசும், டீசல் 31 காசும் உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் இன்றும் (சனிக்கிழமை) விலை உயர்வு இருக்கும் பட்சத்தில், ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ கடந்துவிடும். இதேபோல், பெட்ரோலும் ஒரு லிட்டர் ரூ.104-ஐ தொட்டுவிடும்.

Next Story