திருமண நிலையத்துக்கு சீல் புதுச்சேரி நகராட்சி அதிரடி

நகராட்சிக்கு வரிகட்டாத திருமண நிலையத்துக்கு புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுச்சேரி
நகராட்சிக்கு வரிகட்டாத திருமண நிலையத்துக்கு புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வரிபாக்கி
புதுவை காந்தி வீதியில் சிங்கப்பூர் திருமண நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த திருமண நிலையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வர்த்தக உரிம கட்டணத்தை (வரி) முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தொகை சுமார் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரி பாக்கியை கட்டக்கோரி நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் வரி கட்டப்படவில்லை என்று தெரிகிறது.
சீல் வைப்பு
இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில் வருவாய் அதிகாரி சாம்சிவம் மற்றும் ஊழியர்கள் நேற்று சிங்கப்பூர் திருமண நிலையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக நகராட்சிக்கு வரிகளை செலுத்தாதவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இது வரி கட்டாதவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story