தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து


தேசிய விருது பெற்ற  திரைப்பட கலைஞர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
x
தினத்தந்தி 25 Oct 2021 4:33 PM GMT (Updated: 2021-10-25T22:03:47+05:30)

தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அந்தவகையில் தமிழகத்தில் இருந்து நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான் உள்பட திரைப்பட கலைஞர்கள் விருதுகளை பெற்றனர்.

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில், 'இந்திய சினிமாவில் பங்களித்ததற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிப்புமிக்க தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட கலைஞர்களை வாழ்த்துகிறேன். தமிழகத்துக்கு இது பெருமையான தருணம்' என்று பதிவிட்டுள்ளார்.

Next Story