கடலுார்: டெங்கு பாதித்த மாணவர் பலி


கடலுார்:  டெங்கு பாதித்த மாணவர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2021 12:21 AM GMT (Updated: 2021-10-26T05:51:40+05:30)

கடலுாரில் டெங்கு காய்ச்சல் பாதித்த மாணவர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.கடலுார்,

கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த ஆராய்ச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்.  இவரது மகன் தருண் (வயது 17).  கடலுார் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளார்.

இதுதவிர, டெங்கு பாதித்த இளம்பெண் மற்றும் 20 வயது நபர் ஆகியோருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 36 வயது நபர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு உள்ளார்.


Next Story