பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டிப்பு


பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 1:12 PM GMT (Updated: 26 Oct 2021 1:12 PM GMT)

பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த மே மாதம் 28ந்தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார்.

இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந்தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

அந்த பரோல் நீட்டிப்பு இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 5-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story