காரைக்கால் மாவட்ட பா ம க செயலாளர் தேவமணி கொலையில் மேலும் ஒருவர் கைது


காரைக்கால் மாவட்ட பா ம க செயலாளர் தேவமணி கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 9:49 PM IST (Updated: 17 Nov 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால்
காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

படுகொலை

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி (வயது 53). கடந்த மாதம் 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து அருகில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தேவமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவருக்கும் இடையே உள்ள இடப்பிரச்சினை தொடர்பாக கூலிப்படையை ஏவி தேவமணியை, மணிமாறன் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ஒருவர் கைது

இந்த கொலை வழக்கில் மணிமாறன் (28), தமிழக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி (59), இவரது மகன்கள் பிரபாகரன் (28), ஜிந்தாகுரு (26), மயிலாடுதுறையை சேர்ந்த ராமச்சந்திரன் (54), அருண் (31), மணிமாறனின் தாயார் நவமணி (56) மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
இந்த நிலையில் தேவமணி படுகொலையில் கூலிப்படைக்கு உடந்தையாக செயல்பட்ட, மயிலாடுதுறையைச் சேர்ந்த முத்துப்பாண்டி (22) என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரையும் சேர்த்து இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
1 More update

Next Story