எஸ்.ஐ. கொலை வழக்கு: விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் - திருச்சி சரக டிஐஜி தகவல்


எஸ்.ஐ. கொலை வழக்கு: விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் - திருச்சி சரக டிஐஜி தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2021 7:43 AM GMT (Updated: 21 Nov 2021 7:43 AM GMT)

எஸ்.ஐ. கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

புதுக்கோட்டை அருகே கீரனூரில்  ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் செய்தியாளர்களிட்ம் கூறுகையில்,

இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார். 4 தனிப்படை அமைத்து விசாரணை
நடைபெற்று வருகிறது. 

திருடர்களை 2 காவலர்கள் துரத்தி சென்றதில், ஒருவர் வழிமாறி சென்றுள்ளார். மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, குற்றவாளிகள் விரைவில்  கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Next Story