மாநில செய்திகள்

போலீசாருக்கான வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவு + "||" + Government orders large-scale construction of houses for police

போலீசாருக்கான வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவு

போலீசாருக்கான வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவு
காவலர்கள் முதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வரை குடியிருக்கும் போலீஸ் குடியிருப்பு வீடுகளை பெரிதாக கட்டிக்கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை,

தமிழகம் முழுவதும் போலீசார் வசிப்பதற்கு குறைந்த வாடகையில் அரசு வீடுகளை கட்டி கொடுக்கிறது. போலீஸ் குடியிருப்புகள் என்று இந்த வீடுகள் அழைக்கப்படுகிறது. இந்த வீடுகளில் காவலர் முதல் டி.எஸ்.பி.க்கள் (துணை போலீஸ் சூப்பிரண்டுகள்) வரை வசிக்கிறார்கள். பதவிக்கேற்ப இந்த வீடுகளின் அளவு இருக்கும். 1990-ம் ஆண்டில் காவலர்களுக்கான வீடுகள் குருவிக்கூடு போல 375 சதுர அடி அளவில்தான் கட்டிக்கொடுக்கப்பட்டது.


பின்பு அது 650 சதுர அடி அளவிலான வீடுகளாக பெரிதாக்கப்பட்டது. தற்போது அதை மேலும் பெரிதாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் வீடுகள் மட்டும் அல்லாது, சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் வசிக்கும் வீடுகளின் அளவையும் பெரிதாக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்த அறிவிப்புக்கிணங்க இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை விவரம் வருமாறு:-

100 சதுர அடி அதிகம்

காவலர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கான குடியிருப்பு வீடுகள் தற்போது 650 சதுர அடி அளவினை கொண்டது. அது 750 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 15.38 சதவீதம் அதிகம். சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான வீடுகள் தற்போது 724 சதுர அடி அளவினை கொண்டது. அது 850 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 17.40 சதவீதம் இது அதிகமாகும்.

இன்ஸ்பெக்டர்கள் வசிக்கும் வீடுகள் 843 சதுர அடியில் இருந்து, 18.62 சதவீதம் அதிகமாக 1,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டி.எஸ்.பி.கள் வசிக்கும் வீடுகள் 1,273 சதுர அடியில் இருந்து, 17.83 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 1500 சதுர அடியாக உயர்த்தப்படுகிறது. இனிமேல் கட்டப்படும் போலீஸ் குடியிருப்பு வீடுகள் இதன் அடிப்படையில் கட்டப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் பேர் பயன்

தமிழக காவல்துறையில் காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான பதவிகளில் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள இந்த புதிய உத்தரவு நல்ல வரப்பிரசாதமாகும். மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரோடு வாழும் காவலர்களுக்கு இந்த புதிய வீடுகள் வசதியாக இருக்கும் என்றும், இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் தமிழக அரசு வேண்டுகோள்
குடியரசு தின விழாவை காண பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைத்து உத்தரவிட முடியாது என்றும், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டை மனுதாரர்கள் அணுகலாம் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கண்டன கருத்துகளை நீக்கி சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
4. குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
பிரபல ரவுடி படப்பை குணாவை 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.