‘ஆயுள் முழுவதும் அனுபவிப்பதுதான் ஆயுள் தண்டனை’ கைதியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


‘ஆயுள் முழுவதும் அனுபவிப்பதுதான் ஆயுள் தண்டனை’ கைதியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Nov 2021 7:49 PM GMT (Updated: 30 Nov 2021 7:49 PM GMT)

‘ஆயுள் முழுவதும் அனுபவிப்பதுதான் ஆயுள் தண்டனை’ கைதியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரபாதி என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து வீரபாரதி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் இவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் தீர்ப்பு கூறினர். அந்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உரிமை கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் அனுபவிக்க வேண்டிய தண்டனை என்று சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. அதன்படி மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story