மாநில செய்திகள்

ரூ.2 கோடி லஞ்ச பணம் பறிமுதல் - பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் கைது + "||" + 2 crore bribery case - Female public works engineer 'suddenly' arrested

ரூ.2 கோடி லஞ்ச பணம் பறிமுதல் - பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் கைது

ரூ.2 கோடி லஞ்ச பணம் பறிமுதல் - பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் கைது
ரூ.2 கோடி லஞ்ச பணம் பறிமுதல் செய்த வழக்கில் பொதுப்பணித்துறை பெண் என்ஜினீயர் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வேலூர்,

வேலூர் மண்டல பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (தொழில்நுட்பகல்வி) அலுவலகம் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்கள் உள்ளன. இதன் செயற்பொறியாளராக ஷோபனா (வயது 57) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் அரசு கல்லூரிகளில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்வார்.


ரூ.2 கோடிக்கு மேல் பணம், நகை பறிமுதல்

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கட்டிட ஒப்பந்ததாரர்களிடம் அவர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரின் காரில் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஷோபனா தங்கியிருந்த குடியிருப்பு மற்றும் அவரின் சொந்த ஊரான ஓசூரிலும் சோதனை செய்யப்பட்டது.

அதில் ரூ.2 கோடிக்கு மேல் பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், பல வங்கிக்கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திடீர் கைது

இதையடுத்து ஷோபனா திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துணை கண்காணிப்பு என்ஜினீயராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியில் சேராமல் இருந்தாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வேலூரில் ஷோபனாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திடீரென கைது செய்துனர். தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி தலைமைச்செயலக ஊழியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமைச்செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
2. மோடி புகைப்படம் வைத்த விவகாரம்: பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறியதாக பா.ஜனதா நிர்வாகி கைது
கோவை அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து மோடி புகைப்படத்தை மாட்டிய வழக்கில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
3. நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
சென்னையில் நண்பரின் வீட்டில் 21 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார்.
5. திருடிய பொருட்களை விற்க வந்தபோது சிக்கினார்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் முன்னாள் போலீஸ்காரர் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருடிய பொருட்களை விற்க வந்த முன்னாள் போலீஸ்காரர் கைதானார். அவரிடம் இருந்து 5½ பவுன் நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.