உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முகத்தில் வர்ணம் பூசி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு


உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி முகத்தில் வர்ணம் பூசி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 1 Dec 2021 3:28 AM IST (Updated: 1 Dec 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா நகரில் ‘பாகுபாட்டை ஒழிப்போம், எய்ட்சை தடுப்போம்’ என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

சென்னை அண்ணா நகரில் ‘பாகுபாட்டை ஒழிப்போம், எய்ட்சை தடுப்போம்’ என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிம்ஸ் மருத்துவமனை தொற்றுநோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை தலைவர் டாக்டர் பி.குகநாதம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் டாக்டர் ஜானகிராமன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் உலக எய்ட்ஸ் தின சிறப்பு விழிப்புணர்வு பதாகைகளை டாக்டர் பி.குகநாதம் மற்றும் டாக்டர் ஜானகிராமன் வெளியிட்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி மற்றும் திருத்தங்கல் நாடார் கலை கல்லூரி மாணவ- மாணவியர்கள் முகத்தில் வர்ணம் பூசி எய்ட்ஸ் நோயால் ஏற்படும் பாகுபாடு, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் மருத்துவ பாகுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story