வேதா இல்ல விவகாரம்: மேல் முறையீடு செய்ய அதிமுக முடிவு


வேதா இல்ல விவகாரம்: மேல் முறையீடு செய்ய அதிமுக முடிவு
x
தினத்தந்தி 1 Dec 2021 9:23 PM IST (Updated: 1 Dec 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை

போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட் அண்மையில் தீர்ப்பு அளித்தது.  

மேலும்,வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக்கிடம் 3 வாரங்களுக்குள் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில்,  வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்ற  ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக்கோரி அதிமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சிவி சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story