5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி


5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
x
தினத்தந்தி 2 Dec 2021 12:29 AM IST (Updated: 2 Dec 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

5-ந் தேதி நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி.

சென்னை,

சசிகலா அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழை-எளிய மக்களின் துயர் துடைக்கவும் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டவர்.

ஜெயலலிதா காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க, அவருடைய 5-ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சசிகலா, கட்சி தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story