பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: விசாரணையை தாமதப்படுத்த நினைத்தால் பிடிவாரண்டு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: விசாரணையை தாமதப்படுத்த நினைத்தால் பிடிவாரண்டு - சிறப்பு டி.ஜி.பி. தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை.
விழுப்புரம்,
விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வரும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையின்போது, நேற்று சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ரவீந்திரன் குறுக்கிட்டு, எங்கள் தரப்பு மூத்த வக்கீல் மற்றொரு பணி காரணமாக ஐகோர்ட்டில் இருப்பதால் அவர் நேரில் வர முடியவில்லை. எனவே பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி கோபிநாதன், ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கு விசாரணைக்கு சிறப்பு டி.ஜி.பி. தரப்பு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. ஒவ்வொரு விசாரணையின்போதும் ஏதாவது காரணம் சொல்லி மனுதாக்கல் செய்வது, கால அவகாசம் கேட்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை தாமதப்படுத்த நினைக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று சிறப்பு டி.ஜி.பி. தரப்புக்கு நீதிபதி கோபிநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

Related Tags :
Next Story