கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 1 Dec 2021 9:56 PM GMT (Updated: 2021-12-02T03:26:49+05:30)

கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து: வைகோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை சிறப்பு கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.

சென்னை,

ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, தி.மு.க.வின் அப்போதைய தலைவர் கருணாநிதி குறித்தும், அவரது சாதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் அலுவலர் சங்கீதா என்பவர் எழும்பூர் போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நேற்று அந்த வழக்கு சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி என்.ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவுக்காக அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

Next Story