நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு


நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 3:21 PM IST (Updated: 2 Dec 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.


சென்னை,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கடந்த மாதம் கொரோனா பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றார்.  இதனால் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி கூடுதல் பொறுப்பாக கலெக்டர் பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யாவை மாற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.  இதனையடுத்து நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.பி. அம்ரித் நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பிற்கு, நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றி, தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ. இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையரும், பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனருமான சுப்பையா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு பால்வளத்துறையின் இயக்குனராகவும், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பொறுப்பை வகித்து வந்த கந்தசாமி ஐ.ஏ.எஸ். பதவியிடம் மாற்றப்பட்டு பேரிடர் மேலாண்மைத்துறையின் இயக்குனராகவும் மற்றும் வருவாய் நிர்வாகத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  எஸ்.ஏ.ராமன் ஐ.ஏ.எஸ்., கூடுதலாக பொறுப்பு வகித்து வந்த தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் பொறுப்பிற்கு, நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்படுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story