தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது...!
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
மதுரை,
ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, மதுரை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு பணிக்கு பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்றார். அப்போது, ராதாகிருஷ்ணன் பயணித்த கார் விமானநிலைய தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதேவேளை அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் பயணித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கார் டிரைவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மாற்று கார் மூலம் ராதாகிருஷ்ணன் புறப்பட்டு சென்றார்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story