தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் மீண்டும் சதம் அடித்தது
தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் மீண்டும் சதம் அடித்து இருக்கிறது. 2 காய்கறியும் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆனது.
சென்னை,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கிலோ ரூ.140 வரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் விற்பனை ஆனது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, தற்போது ஒரு கிலோ ரூ.55 முதல் 70 வரையிலான விலையில் ரகத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து வரத்து குறைவாக இருப்பதால் அதன் விலை குறையாமல் அப்படியே இருக்கிறது.
இதற்கிடையில் தற்போது தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் சதம் அடித்து இருக்கிறது. இந்த 2 காய்கறியும் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை அதிகரித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதே வெளிச்சந்தையில் ரூ.130 வரை விற்பனை ஆனதை பார்க்க முடிந்தது. ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்து, பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர் தற்போது மீண்டும் ரூ.100-ஐ தாண்டி விற்கப்பட்டது.
‘கிடுகிடு’வென உயர்வு
கத்தரிக்காய், வெண்டைக்காயை போல, அவரைக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலையும் ரூ.100-ஐ தொடும் நிலையில் இருக்கிறது. தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்து இருப்பதன் காரணமாகவே அதன் விலை ‘கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது. உதாரணமாக ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த பீர்க்கங்காய், கொத்தவரங்காய், பாகற்காய், புடலங்காய், நூக்கல் ஆகியவற்றின் விலை ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அனைத்து காய்கறி வகைகளும் ரூ.100-ஐ நெருங்கிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் காய்கறியை அளவோடு வாங்குவதாகவும், இதனால் முன்பு இருந்தது போல் வியாபாரம் இல்லாத நிலை இருப்பதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
விலை நிலவரம்
பல்லாரி- ரூ.26 முதல் ரூ.34 வரை, தக்காளி- ரூ.55 முதல் ரூ.70 வரை, உருளைக்கிழங்கு- ரூ.22 முதல் ரூ.32 வரை, சாம்பார் வெங்காயம்- ரூ.45 முதல் ரூ.65 வரை, கேரட்- ரூ.60, பீட்ரூட்- ரூ.35 முதல் ரூ.55 வரை, சவ்சவ்- ரூ.22 முதல் ரூ.25 வரை, முள்ளங்கி- ரூ.50 முதல் ரூ.55 வரை, முட்டைக்கோஸ் - ரூ.35, வெண்டைக்காய்- ரூ.100 முதல் ரூ.110 வரை, கத்தரிக்காய்- ரூ.80 முதல் ரூ.110 வரை, பாகற்காய்- ரூ.60, புடலங்காய்- ரூ.60, சுரைக்காய்- ரூ.30, சேனைக்கிழங்கு - ரூ.16 முதல் ரூ.20 வரை, முருங்கைக்காய்- ரூ.80 முதல் ரூ.90 வரை, சேப்பக்கிழங்கு- ரூ.15 முதல் ரூ.20 வரை, காலிபிளவர் (ஒரு பூ) - ரூ.25 முதல் ரூ.30 வரை, வெள்ளரிக்காய்- ரூ.15, பச்சைமிளகாய்- ரூ.30, பட்டாணி- ரூ.60, இஞ்சி- ரூ.30 முதல் ரூ.60 வரை, அவரைக்காய்- ரூ.80 முதல் ரூ.90 வரை, பூசணிக்காய்- ரூ.10, பீர்க்கங்காய்- ரூ.60 முதல் ரூ.70 வரை, நூக்கல்- ரூ.70, கொத்தவரங்காய்- ரூ.60, கோவைக்காய்- ரூ.50, குடைமிளகாய்- ரூ.75, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.34 முதல் ரூ.36 வரை, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.6.

Related Tags :
Next Story