பாலியல் வழக்கு குற்றப்பத்திரிகையை ஏற்றதை எதிர்த்து சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது


பாலியல் வழக்கு குற்றப்பத்திரிகையை ஏற்றதை எதிர்த்து சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது
x
தினத்தந்தி 3 Dec 2021 2:36 AM IST (Updated: 3 Dec 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கு குற்றப்பத்திரிகையை ஏற்றதை எதிர்த்து சிறப்பு டி.ஜி.பி. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில், குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெறும் நேரத்தில் இப்படி ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி 1,300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையை அரைகுறையாக படித்து, அவசர கதியில் விழுப்புரம் கோர்ட்டு நீதிபதி வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். எனவே, வழக்கை அவசரகதியில் விசாரணைக்கு எடுத்து விழுப்புரம் நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்,

இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பதை முடிவு செய்ய இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு உகந்தது என்று முடிவு செய்து, வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Next Story