தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்
x
தினத்தந்தி 3 Dec 2021 12:54 PM IST (Updated: 3 Dec 2021 12:54 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு  அதிகம் இருந்த கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த நிலையில் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.




Next Story