பாரதியார் நினைவு நூற்றாண்டு: திருவல்லிக்கேணியில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சி


பாரதியார் நினைவு நூற்றாண்டு: திருவல்லிக்கேணியில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 4 Dec 2021 12:29 AM IST (Updated: 4 Dec 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

பாரதியார் நினைவு நூற்றாண்டு: திருவல்லிக்கேணியில் 44 வாரங்களுக்கு தொடர் நிகழ்ச்சி தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளை போற்றிடும் வகையில் 14 அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டுக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும்விதமாக சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் 4-ந் தேதி (இன்று) தொடங்கி 44 வாரங்களுக்கு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, பள்ளிக்கல்வித்துறை, வானவில் பண்பாட்டு மையம் மற்றும் பாரதி புகழ் பாடும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடர்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கி நடைபெறும்.

முதல் நிகழ்ச்சியான தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் பாரதியின் புகழ்பாடும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியை 4-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story