தமிழக ரெயில், விமான நிலையங்களில் கண்காணிப்பு ஒமைக்ரானை தடுக்க சிறப்பு நடவடிக்கை
ஒமைக்ரானை தடுக்க தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. சந்தேகத்துக்குரிய 3 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை,
கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியது முதல் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஒமைக்ரான்
தொடர்ந்து தற்போது வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல பாதுகாப்பு வழி முறைகளை மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புது வகையான கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று முன்தினம் (வியாழக் கிழமை) கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுமி உள்பட 3 பேர்
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று லண்டனில் இருந்து சென்னை வந்த 10 வயது சிறுமி, 35 வயது பெண் ஆகிய இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் பயணம் மேற்கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைப்போல் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் மரபணுவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
சிறப்பு நடவடிக்கை
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயம் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பரிசோதனை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறவர்களை தனிமைப்படுத்தி, அவர்களது மாதிரிகளை மரபணுவியல் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ‘வார்டுகள்’
சென்னையின் முக்கிய ஆஸ்பத்திரிகளான ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரி, திருச்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் 40 பிரத்யேக சிறப்பு வார்டுகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
லண்டன், தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு, தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டாலும், அவர்களை வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உறுதி செய்து கண்காணிக்க உள்ளாட்சித்துறை, போலீசார், சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரெயில் பயணிகள்
இதைப்போல் கர்நாடகாவில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் ரெயில் பயணிகளையும் பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று கர்நாடகாவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரையும் 7 நாட்கள் தனிமையில் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நலம் விசாரித்த அமைச்சர்
வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிண்டி கிங் கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேர் என மொத்தம் 8 பேரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை முழு கவச உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்காவில் உருவெடுத்த ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்காக, கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த 56 வயதான பயணி ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, திருச்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை இங்கிலாந்தில் இருந்து வந்த 10 வயது சிறுமி மற்றும் பெண் ஒருவர் என 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று எந்தவகையை சேர்ந்தது என்பது குறித்து மரபணு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து வந்த இவர்களுடன் சேர்த்து தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 6 பேர் கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்து தொற்று பாதிப்புக்குள்ளான 3 பேர் உள்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் பாதிப்பா?
கூடுதல் கவனம் செலுத்தப்படும் ‘ரிஸ்க்’ நாடுகள் என சொல்லப்படும் 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டி கிங் ஆஸ்பத்திரியில், வெளி நாடுகளில் இருந்து வரும் பணிகளை அனுமதித்து கண்காணிப்பதற்கு 200 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் இருக்கிறது. 12 நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை 2 ஆயிரத்து 928 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ‘ரிஸ்க்’ அல்லாத நாடுகளில் இருந்து 10 ஆயிரத்து 736 பேர் தமிழகம் வந்துள்ளனர். இதில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை எடுத்த பரிசோதனைகளில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 நாட்களில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது ஒமைக்ரான் பாதிப்பா? அல்லது கொரோனாவா? என்பது குறித்து தெரியவரும்.
கொரோனா பாதிப்பு 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்தான் இது குறித்து அச்சப்பட வேண்டும். தமிழகத்தில் 96 சதவீதம் டெல்டா வைரஸ் பாதிப்புதான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story