சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை விவரம் வெளியீடு
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் ஏற்றம் கண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் பருவமழையை முன்னிட்டு தக்காளி விலை உயர்ந்தது. சென்னையில் கிலோ ரூ.120க்கும் கூடுதலாக விற்றது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதன்பின் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டது. விலையும் வீழ்ச்சி அடைந்தது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. நவீன் தக்காளி 85 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் 30 ரூபாய் முதல் 36 ரூபாய்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய் முதல்வ 65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக கேரட் 75 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 55 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 90 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும் கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது.
இதுதவிர, புடலங்காய், பீர்க்கங்காய், கோவக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் 90 ரூபாய்க்கும் கொத்தவரங்காய் 50 ரூபாய்க்கும், நூக்கல் 80 ரூபாய்க்கும், பூண்டு 130 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 150 முதல் 180 ரூபாய்க்கும், ஒரு தேங்காய் 36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story