தடுப்பூசிக்கு பரிசு அறிவிப்பு; சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்
கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அடுத்து சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் காலை முதலே ஏராளமானோர் தடுப்பூசி மையத்தில் குவிந்தனர். அவர்களில் பலர் சமூக இடைவெளியை மறந்து ஒன்றாக கூடியிருந்தனர். இதனால், கொரோனா பரவல் ஏற்படும் சூழல் இருந்தது.
இதுகுறித்து பேசிய உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி காந்த், விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி மக்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story