விழுப்புரம் மாவட்டம் கழுவேலி சதுப்புநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டம் கழுவேலி சதுப்புநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 12:25 AM IST (Updated: 7 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டம் கழுவேலி சதுப்புநிலம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்குகள் பாதுகாவலர் ஆகியோர் அரசுக்கு வரைவு அறிவிப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாவுக்கு உட்பட்ட கழுவேலியில் உள்ள 5151.60 ஹெக்டேர் சதுப்புநிலத்தை கழுவேலி பறவைகள் சரணாலயமாக வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த முன்மொழிவை அரசு கவனத்துடன் பரிசீலித்து அந்த பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கிறது. இதற்கு ஏதுவான அறிவிப்பாணை, தமிழ் மற்றும் ஆங்கில அரசிதழ்களில் வெளியிடப்படும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு மைய அச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story