சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு கொலை மிரட்டல்
சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு கொலை மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.
சென்னை,
பிரபல சினிமா ஸ்டண்டு மாஸ்டரும், தென் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தலைவருமான ஜாக்குவார் தங்கம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் 1,600 படங்களுக்கு ஸ்டண்டு மாஸ்டராக பணி புரிந்துள்ளேன். எனக்கு சமீபகாலமாக செல்போன் வாயிலாக கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. நடிகர் அஜித்திற்கும், எனக்கும் விரோதம் இருப்பது போல பொய்யான தகவல்கள் வெளியிடப்படுகிறது. அஜித்தின் ரசிகர்களை எனக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகிறது. இதுபோன்ற கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மற்றும் என்னைப்பற்றி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story