வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்த எழும்பூர்-மும்பை, சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினசரி இயக்கம்
வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்த எழும்பூர்-மும்பை, சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினசரி இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கீழ்க்கண்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள், தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளாக மாற்றப்பட்டுள்ளது.
* மும்பை சி.எஸ்.எம்.டி-சென்னை எழும்பூர் (வண்டி எண்:22157) இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 12-ந்தேதி முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும், மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி (22158) இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும் இயக்கப்படும்.
* அதேபோல் சென்னை எழும்பூர்-சேலம் (22153) இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 13-ந்தேதி முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும், மறுமார்க்கமாக சேலம்-சென்னை எழும்பூர் (22154) இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 14-ந்தேதி முதல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாகவும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story