ஆம்பூரில் ஏடிஎம் மையம் மற்றும் வங்கியில் தீ விபத்து!
ஆம்பூரில் உள்ள ஒரு ஏடிஎம் மையம் மற்றும் வங்கியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள யூனியன் வங்கியில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள யூனியன் வங்கியில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
காலையில் அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் வங்கி மற்றும் ஏடிஎம் மையத்தில் இருந்து புகை வருவதை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
வங்கியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட இதர சாதனங்கள் தீயில் கருகி உள்ளதாகவும், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story