டாஸ்மாக் நேரம் மாற்றம்: தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


டாஸ்மாக் நேரம் மாற்றம்: தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Dec 2021 7:15 AM GMT (Updated: 8 Dec 2021 7:15 AM GMT)

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக்கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை, எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தொழில் சங்க சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு 21 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், அதுபோன்று எந்த அறிவிப்பும் வரவில்லை. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல்,  தன்னிச்சையாக செயல்பட்டு வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதால், டாஸ்மாக் நேரம் மாற்றம் தொடர்பாக அறிவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Next Story