பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? முழு விவரம்!!!


பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? முழு விவரம்!!!
x
தினத்தந்தி 8 Dec 2021 5:07 PM IST (Updated: 8 Dec 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாபடர் விபத்தில், 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(  நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 

இதுவரை  13 பேரின் உடல்கள்   மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி  மதுலிகா ராவத் (உயிரிழந்ததாக  விமானப்படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்

1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
3. பிரிகேடியர் லிடர்
4. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
5. குர்சேவர் சிங்
6. ஜிஜேந்தர் குமார்
7. விவேக் குமார்
8. சார் தேஜா
9. கவில்தார் சத்பால்

மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்ததாகவும், சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஹெலிகாப்டர் விபத்துக்குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 

* ஹெலிகாப்டர் விபத்துக்கு என்ன காரணம்?

* ஹெலிகாப்டர் மின்கம்பிகளில் மோதியதா?

* விபத்துக்குள்ளானபோது ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் இருந்தது?

* இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா?

ஹெலிகாப்டர் எம்.ஐ 17 விஐ ரகத்தைச் சேர்ந்தது.  ரஷிய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா இதனை வாங்கியது.

இது ராணுவ ஆயுதங்கள், வீரர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. இதனை தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் பயன்படுத்த முடியும்.

கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை.

கதவுகளை இழுவை மூலம் திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராசூட் உபகரணங்கள், தேடுதல் விளக்குகள், எப்எல்ஐஆர் சிஸ்டம், எமர்ஜெனிஸ் ப்ளோட்டிங் சிஸ்டம் உள்ளன

36 ராணுவ வீரர்கள், 4.50 டன் பொருட்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது.
இந்த ஹெலிகாப்டரில் ஷட்டர்ன் வி ரக துப்பாக்கிகள், எஸ்-8 ரக ராக்கெட்டுகள், 23எம்எம் எந்திர துப்பாக்கிகள், பிகேடி எந்திர துப்பாக்கி, ஏகேஎம் எந்திரதுப்பாக்கி மூலம் எதிரிகளை சுடமுடியும் தாக்க முடியும்.

எதிரிகளின் இருப்பிடத்தை ராக்கெட் வீசி அழிப்பது, வாகனங்களை அழிப்பது, குறிவைத்து தாக்குதல், நகரும் இலக்குகளை சரியாகத் தாக்குவது போன்றவற்றை இந்த ஹெலிகாப்டர் மூலம் செய்யலாம்.

இந்த ஹெலிகாப்டரில் போம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். இது ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும்.

இது மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும். அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்க முடியும்.

Next Story