குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் விருந்து வழங்கி கவுரவிக்கப்பட்டவர். இவருக்கு 2020 ஆம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக விருது வழங்கப்பட்டது’ என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story