முப்படை தலைமை தளபதியின் இறப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய என்ஜினீயர் கைது


முப்படை தலைமை தளபதியின் இறப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 2:36 AM IST (Updated: 11 Dec 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி, அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்தும், தமிழக அரசு மீதும் குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த சிபிந்த் (வயது 23) என்ற வாலிபர் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் அவதூறு கருத்துகளை பரப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

சிறையில் அடைப்பு

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் சிபிந்தை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சிபிந்த்தை போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைத்தனர். கைதான சிபிந்த் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.

Next Story