வடகிழக்கு பருவமழை பாதிப்பு: ரூ.300 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு


வடகிழக்கு பருவமழை பாதிப்பு: ரூ.300 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு
x
தினத்தந்தி 12 Dec 2021 9:10 AM IST (Updated: 12 Dec 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகர் முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தன. மழை வெள்ள பாதிப்புகளை மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தமிழக அரசு சார்பில்  மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் வழங்க கோரிக்கையும் வைத்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பெய்த தொடர்மழை காரணமாக 32 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மழை பாதிப்புகளை சரி செய்ய 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு 132 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகத்திற்கு 62 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 20 கோடி ரூபாயும், நெடுஞ்சாலை துறைக்கு 17 கோடி ரூபாயும், மின்சாரத்துறைக்கு 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.

Next Story