நடிகர் ரஜினிகாந்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72-வது வயதில் இன்று அடியெத்து வைத்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகனாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் முடிசூடா மன்னராக வலம் வரும் ரஜினிகாந்த், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது; - “ திரு.
@rajinikanth அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப்பதிவிட்டுள்ளார்.
அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். #Rajinikanth அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன்”எனப்பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story