சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெற இருப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட மாநில தேர்தல் ஆணையம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஆளும் திமுகவானது, வரும் 18-ஆம் தேதி சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. சென்னை கலைஞர் அரங்கில் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story