ஹெலிகாப்டர் விபத்து குறித்து 4-வது நாளாக உயர் அதிகாரிகள் ஆய்வு
முப்படை தலைமை தளபதி பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்து போலீசார், விமானப்படை, ராணுவ உயர் அதிகாரிகள் 4-வது நாளாக ஆய்வு நடத்தினர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
விபத்து குறித்து விசாரிக்க காவல்துறை தரப்பில் நீலகிரி சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 5 போலீஸ்காரர்கள் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
அவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு உயர் அதிகாரிகள்4-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்த மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விமானப்படை ஏர்மார்ஷல் மானவேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story