பொட்டாஷ் உரம் மூட்டைக்கு ரூ.660 உயர்வு தமிழக அரசு அறிவிப்பு


பொட்டாஷ் உரம் மூட்டைக்கு ரூ.660 உயர்வு தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 3:26 AM IST (Updated: 15 Dec 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

பொட்டாஷ் உரம் மூட்டைக்கு ரூ.660 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட யூரியா, டி.ஏ.பி. மற்றும் பொட்டாஷ் உரங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும், கூடுதலாக உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை மந்திரிக்கு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, டிசம்பர் மாதத்துக்கு கூடுதலாக யூரியா உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொட்டாஷ் உரம் விலை உயர்வு

தற்போது நிலவி வரும் பொட்டாஷ் உரத்தேவையினை கருதி தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தேவைப்படும் மாவட்டங்களுக்கு விரைவாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரத்தின் விற்பனை விலை மூட்டை ஒன்று ரூ.1,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் புதிதாக வந்தடைந்துள்ள பொட்டாஷ் உரக்குவியலுக்கு மட்டுமே பொருந்தும்.

கண்காணிக்க குழு

ஏற்கனவே இருப்பில் உள்ள 18 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பொட்டாஷ் உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள படி ரூ.1040 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகள் ரூ.1,040-க்கு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

Next Story