டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மதுரை,
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூ-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் ஏராளமானவர்கள் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறிய 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி.யிடம் டி.என்.பி.எஸ்.சி. புகார் அளித்தது. அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து குரூப்-4 முறைகேடு வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்தனர். இந்த குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது.
எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்களை கண்காணிக்க குழு அமைத்து உத்தரவிட வேண்டும். முறைகேடு செய்து ஏற்கனவே நிரப்பப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு உத்தரவிட வேண்டும். குரூப்-4 முறைகேடு குறித்த அனைத்து உண்மைகளையும் கண்டுபிடிக்கவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
தலைமைச் செயலாளர் பதில் மனு
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, குரூப்-4 முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்பேரில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த முறைகேடு புகாரின்பேரில் தேர்வு எழுதியவர்கள், போலீசார், டி.என்.பி.எஸ்.சி. பணியாளர்கள் உள்ளிட்ட 115-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவாக உள்ளனர். ஏற்கனவே நடந்த குரூப்-2, கிராம நிர்வாக அதிகாரி பணி தேர்வு முறைகேடு குறித்தும் ஒட்டுமொத்தமாக விசாரித்து வருகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றத்தேவையில்லை” என்று கூறப்பட்டு இருந்தது.
சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்தனர். அப்போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story