ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்குக்கு எதிரான போக்குவரத்து ஊழியரின் மனு தள்ளுபடி
பணி நீக்கத்தை ரத்து செய்வதற்காக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற போக்குவரத்து கழக ஊழியரின் மனுவை சென்னை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி வந்தார். பணிக்கு ஒழுங்காக வராததால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து 2009-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தபால் மூலம் மனு அனுப்பிய போக்குவரத்து கழக ஊழியர், மனுவுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் சேர்த்து அனுப்பி உள்ளார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நீதி பரிபாலனத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி போக்குவரத்து கழக பணியாளர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
விடுவிக்க வேண்டும்
இந்த மனு மீதான விசாரணையின்போது போக்குவரத்து கழக ஊழியர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரருக்கு மனநல பாதிப்பு உள்ளது. இதற்காக அவர் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். எனவே, மனுதாரரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்றார்.
இதைத்தொடர்ந்து, மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரி டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
மனு தள்ளுபடி
இந்தநிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மனுதாரருக்கு அவர் மீதான குற்றச்சாட்டு குறித்தும், கோர்ட்டு விசாரணை குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும், நினைவாற்றல், சிந்தனை, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் போன்றவை போதிய அளவில் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, ‘கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அறிக்கையை பார்க்கும்போது மனுதாரர் இந்த வழக்கு குறித்து அறிந்து கொள்ளும் நிலையில் இருப்பது தெரிகிறது. எனவே, மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார், அவரால் இந்த வழக்கை எதிர்கொள்ள முடியாது என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story