கொரோனா எதிரொலி; திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை


கொரோனா எதிரொலி; திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 16 Dec 2021 9:31 PM IST (Updated: 16 Dec 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.



திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப காலங்களாக குறைந்து வருகின்றன.  ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.  தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  எனினும், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்புகளும் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.  நைஜீரியாவில் இருந்து தமிழகத்தில் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கூடுதலாக 8 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது இன்று தெரிய வந்துள்ளது.  கொரோனா பரவலை முன்னிட்டு திருவண்ணாமலையில் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இதனை திருவண்ணாமலை ஆட்சியர் அறிவித்து உள்ளார்.


Next Story