திருமணத்துக்கு கள்ளக்காதலன் மறுத்ததால் நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை


திருமணத்துக்கு கள்ளக்காதலன் மறுத்ததால் நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2021 12:43 AM IST (Updated: 17 Dec 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்கு கள்ளக்காதலன் மறுத்ததால் நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோவால் பரபரப்பு.

திருப்பூர்,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருடைய கணவர் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது. இதனால் தெய்வானை மட்டும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வந்து வாடகை வீட்டில் குடியேறினார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்க்கும் திருமணமான 40 வயது தொழிலாளியுடன் கள்ளக்காதல் உண்டானது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளக்காதலனிடம் தெய்வானை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் கள்ளக்காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் தெய்வானை புகார் கொடுத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தெய்வானை தனது வீட்டின் முன்பாக நடுரோட்டில் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரோடு எரியும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story