ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலை வராதது ஏன்? வைகோ எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலை வராதது ஏன்? வைகோ எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.
சென்னை,
டெல்லி மாநிலங்களவையில், ‘மக்கள் நலன் கருதி பெட்ரோல்-டீசல் விலையை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வரும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா?’, உள்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்து வைகோ எம்.பி. பேசினார். இதற்கு பதில் அளித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி பேசியதாவது:-
இந்தாண்டே பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.10-ம் என மத்திய அரசு விலை குறைப்பு செய்தது. இந்த முடிவை ஏற்று பல மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 279(ஏ)-ன் படி, பெட்ரோலியக் கச்சா எண்ணெய், உயர்தர டீசல், மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), இயற்கை எரிகாற்று மற்றும் விமான எரிபொருள்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை, எந்த நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டு வருவது? என்பது குறித்து ஜி.எ.ஸ்.டி. மன்றம்தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.
மேலும், மத்திய ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 9(2)-ன் படி, மேற்கண்ட பொருள்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு, ஜி.எஸ்.டி. மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால் இதுவரை அத்தகைய பரிந்துரை எதுவும், ஜி.எஸ்.டி. மன்றத்திடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.இவ்வாறு அவர் பதில் அளித்தார். மேற்கண்ட தகவல் மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story