கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது
கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது .
கடலூர்,
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது
முன்னதாக தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது,ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்
Related Tags :
Next Story